கரேன்செவின் NoTe நோர்வே மொழி இணையவழிக் கற்பித்தளுக்கு வருக – அனைத்து நிலைகளுக்குமான இணையதள நோர்வே மொழிக்கல்வி. எங்களது பாடங்கள் உங்களை நோர்வே மொழித்தேர்வுக்கும் பெர்கென் தேர்வுக்கும் தயார்படுத்துகிறது. மேலும் UDI மற்றும் Kompetanse நோர்வேவால் அங்கீரிக்கப்பட்டது. இணையப் படிப்புகள் நோர்வே மொழியை தங்கள் தாய்மொழியாக கொண்ட மற்றும் நீண்டகாலமாக பல்வேறு வழிகளில் நோர்வே கல்வியுடன் பணியாற்றிய திறமையான ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
எங்கள் படிப்புகள் இணையத்தளத்தில் உள்ளதால் உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். எங்கும் படிக்கலாம். எப்பொழுதும் படிக்கலாம். நீங்கள் வேலைமிகுதியாக இருந்தாலும் மாணவராக இருந்தாலும் வீட்டிலிருந்தாலும் எல்லா வாழ்க்கை சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இந்த படிப்புகள் பொருத்தமானவை.
எங்களிடம் A1, A2, B1, B2 மற்றும் C1 நிலைகளுக்கான படிப்புகள் உள்ளன. நோர்வே மொழியை புதிதாக கற்றுக்கொள்பவர் அல்லது ஏற்கனவே உயர் நிலையில் இருப்பவர் தங்களை மேலும் மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட நிலைகளிலிருந்து தேர்வு செய்யலாம். இப்படிப்பின் முழு பயனை பெற தினமும் இரண்டிலிருந்து மூன்று மணிநேரம் பாடங்களை படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
சுகாதாரத்துறை மற்றும் மழலையர் பள்ளியில் வேலைப்பார்ப்போருக்கான நோர்வே மொழி பாடங்களும் எங்களிடம் உள்ளன. கூடுதலாக நோர்வே மொழியில் திறம்பட பேச உரையாடல் பயிற்சியும் உள்ளது. ஐம்பது மணிநேர சமூகஅறிவியல் பாடத்தினை (samfunnskunnskapskurs) நோர்வே அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்குகிறோம்.
இணைய வழிக்கல்வி 2015 இல் தொடங்கப்பட்டது. கரேன்செ அவர்கள் நோர்வே மொழி ஆசிரியராக பதினைந்தி வருடத்திற்கும் மேலான தனது அனுபவத்தினை பயன்படுத்தி நோர்வே மொழி படிப்புகளை உருவாக்கியுள்ளார். இணையவழிக்கல்வியில் மாணவர்களை வழிநடத்துவதற்கு தகுதியான நோர்வே மொழி ஆசிரியர்கள் குழு உள்ளது. ஆன்லைன் படிப்புகளுடன் கரேன்செவின் யூடியூப் வீடியோக்கள், பாட்காஸ்ட்கள், குரல் செய்திகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் குழு உள்ளிட்ட எங்கள் இலவச சாதனைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்கள் வெவ்வேறு சேனல்களைப் பற்றிய விவரங்களை இங்கே படிக்கலாம்.
இணையவழிக்கல்வியில் வாசிப்பு கேட்பது எழுத்து பயிற்சிகள் மற்றும் குரல் பதிவுகள் உள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பணிகள் எங்களது ஆசிரியர்களால் வாசிக்கப்படுகின்றது திருத்தப்படுகின்றது மற்றும் மதிப்பெண் கொடுக்கப்படுகின்றது. அடுத்த முறை இதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பதற்கான உதவிக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு படிப்பை பற்றி தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
எங்கள் படிப்புகளை இங்கே காண்க.
இந்த படிப்புகளில் ஒவ்வொரு மாதமும் ஆசிரியருடன் ஒரு மணிநேரம் கலந்துரையாடலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மணிநேர உரையாடலில் உங்களது உச்சரிப்பை மேம்படுத்துவதிலும் மற்றும் நோர்வே மொழியை மிகுதியாக பேசவும் ஒரு வாய்ப்பாக அமையும். இலக்கணம் மற்றும் வேலைக்கான நேர்க்காணலுக்கு உங்களை மேம்படுத்த இந்த ஒரு மணிநேரம் உதவியாக இருக்கும்.
ஒரு மணிநேரம் முடிந்தபின் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள், பயிற்சி செய்ய வேண்டிய வார்த்தைகள் மற்றும் பயனுள்ள இணையதள கோப்புகள் உங்களுக்கு கொடுக்கப்படும்.
NoTe அனைத்து மட்டங்களிலும் ஆங்கில படிப்புகளையும், வணிக ஆங்கிலத்தையும் வழங்குகிறது. எங்களிடம் ஒன்றுலிருந்து ஆறுமாதங்களுக்கு B1 படிப்புகள் வரை உள்ளன. முழு படிப்பையும் முடித்ததும் அடுத்த மட்ட நிலைக்கு செல்ல விரும்பினால் ஆசிரியருடன் பேசுவதற்கு பதிவு செய்யலாம்.
ஆங்கில படிப்புகள் வெறும் ஆங்கில மொழியை கற்பதற்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கு TOEFL மற்றும் IELTS தேர்வுகளுக்கு உங்களை மேன்படுத்தவும் உதவும். எங்கள் ஆங்கில ஆசிரியர் அமெரிக்காவைச் சேர்ந்தவர், நோர்வேயில் வசிக்கிறார்.
யூடியூப் சேனலில் நீங்கள் கரேன்ஸிவிடமிருந்து நோர்வே மொழியை கற்றுக் கொள்ளலாம் மற்றும் இணைய படிப்புகளின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.
புதிய மாணவர்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நீங்கள் எந்த மட்டத்தில் இருக்கிறீர்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். நோர்வே மொழியில் உங்களை சிறந்துவிளங்கவைப்பதே எங்கள் குறிக்கோள்.
Er du interessert i å lære norsk, engelsk eller ta samfunnsfagkurset 50 timer på nett? Send oss en melding i dag og vi tar kontakt med deg.
+47 400 48 599
post@note.no